தளபதி 67 இப்பொழுது இல்லை !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்தின் கதை வலுவாக இருக்கிறது என்று சமீபத்தில் நடிகர் சரத்குமார் தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த படத்தின் அப்டேட் வெளியாகாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் விஜய் பிறந்த நாளன்று தளபதி 66 படத்தில் இருந்து முதல் பார்வை மட்டும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது .

இதனால் லோகேஷ் – விஜய் கூட்டணிக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Share.