விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவை தவிர்த்து மேலும் ஒரு நட்சத்திர நடிகர் !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது . விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பா.ரஞ்சித் , நடிகர்கள் சிலம்பரசன் ,உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் லோகேஷ் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்துள்ளார் .

நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிப்பதை ரகசியமாக வைத்து இருந்தார்கள் படக்குழுவினர் .ஆனால் இணையத்தில் இவர் நடித்து கொண்டு இருக்கும் வீடியோ வைரல் ஆனது . இதனால் இது அனைவருக்கும் தெரிய வந்தது .

Share.