பிரபாஸ் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘ஆதிபுருஷ்’… மாஸான அப்டேட் கொடுத்த இயக்குநர் ஓம் ராவத்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்கிறார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், பிரபாஸுக்கு தம்பியாக பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடிக்கிறார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது.

இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகுகிறது. தற்போது, நடிகர் சயிஃப் அலிகான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

Share.