வெளியானது சார்பட்டா பரம்பரை மேக்கிங் வீடியோ !

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை . நடிகர்கள் பசுபதி ,கலையரசன் , சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் . துஷாரா விஜயன் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .

1960 களின் பின்னணியில், வடசென்னையில் உள்ள இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குலங்களுக்கிடையேயான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது . இதில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், அதில் உள்ள அரசியலையும் காட்டும் படமாக அமைந்து இருந்தது .

நடிகர்களின் தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு, 2020 பெப்ரவரி மற்றும் மார்ச்சில் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால், தயாரிப்பு மேலும் தாமதமாகி இறுதியில் 2020 செப்டம்பரில் படத்தின் பணிகள் தொடங்கியது. இது 2020 திசம்பர் 2020 க்குள் நிறைவடைந்தது.

வெளியீட்டு உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவால் பெறப்பட்டன. திரைப்படம் 2021 சூலை 22 அன்று அதன் செயலியில் வெளியிடப்பட்டது. படத்தின் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்கள், நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தின் பிற முக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டி நல்ல விமர்சனங்கள் பெற்றது .

இந்நிலையில் இந்த படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் இந்த படம் உருவான விதம் பற்றின வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .

Share.