வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருதா?… கொந்தளித்த நடிகைகள்… விருது குழு எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் டாப் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து. கேரளாவின் புகழ் பெற்ற ஓ.என்.வி விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் “கேரளாவின் புகழ்பெற்ற #ONVaward-க்குத் தேர்வு செய்யப்பட்ட ‘கவிப்பேரரசு’ வைரமுத்து அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன்.

தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்!” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ட்விட்டரில் “கோபாலபுரத்தில் ஓ.என்.வி இலக்கிய விருதினைக் கலைஞருக்குக் காணிக்கை செய்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.

அவரது குரலும் அன்பும் இன்னும் அந்த இல்லத்தில் கலைஞர் வாழ்வதாகவே பிரமையூட்டின. தந்தைபோல் தமிழ் மதிக்கும் தனயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தேன்” என்று கூறியிருந்தார். பின், மீடூ சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருதா? என நடிகைகள் பார்வதி – கீது மோகன்தாஸ் – ரீமா கல்லிங்கல், இயக்குநர் அஞ்சலி மேனன், பாடகி சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, ஓ.என்.வி கலாச்சார அகாடமி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “வைரமுத்துவுக்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)
Share.