நெஞ்சுக்கு நீதி வரவேற்பை பெறுமா ?

தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன . இதனை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் 25 வது படமாக இந்த படம் இருக்கிறது . இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .

இதனை தொடர்ந்து மே மாதம் வெல்லுங்க இருக்கும் படத்தை பற்றின தகவல்களை பார்ப்போம் .அந்த வகையில் தயாரிப்பாளர் R.K. சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் விசித்ரன் . பூர்ணா , மது ஷாலினி , பகவதி பெருமாள் என பலர் நடித்து உள்ளனர் இந்த படம் படம் மே 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது .இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் . மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் தான் விசித்ரன் .

இந்த படத்தை தொடர்ந்து வெளியாக இருக்கிற படம் நெஞ்சுக்கு நீதி .இந்த படம் மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . ஹிந்தியில் வெளியான ஆர்டிகில் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது . உதயநிதி ஸ்டாலின் ,ஆரி அர்ஜுனன் , தான்யா ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கி உள்ளார் .

இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள மகா திரைப்படம் மே 27-ஆம் தேதி வெளியாக உள்ளது . இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .ஜெமீல் என்கிற இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார் .

மே மாதம் வெளியாக இருக்கும் இந்த மூன்று படங்களில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனே ஹிந்தியில் இந்த படம் ஹிட் அடித்த நிலையில் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்களா அல்லது இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் .

Share.