திடீரென காதல் பற்றி பதிவிட்டுள்ள ஓவியா ?!

2010ஆம் ஆண்டு வெளியான “களவாணி” படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஓவியா பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ் அடைந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அன்றிலிருந்து இவர் என்ன பேசினாலும் எதைப் பதிவிட்டாலும் அது வைரலாக இணையதளத்தில் பரவியது.

இந்நிலையில் ட்விட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் ஓவியாவை பலரும் அவர் கருத்துக்களை ஆதரித்து பதிவுகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடந்து வரும் சில பிரச்சனைகளை பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவுகளை வெளியிட்டு வரும் ஓவியா தற்போது சுதந்திரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டுமா என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு போன்ற பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் வந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு தன் சாதுரியமான பதில் மூலம் வாயடைக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியே காரசாரமான விவகாரத்தில் ஈடுபட்டு வரும் ஓவியா தற்போது காதல் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் “நாம் நேசிப்பவர்கள் நம் அருகில் இல்லாமல் போனாலும் அவர்கள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை. அவர்கள் குரல் கேட்கவில்லை என்றாலும் அவர்கள் அருகில் இல்லை என்றாலும் அவர்கள் பக்கத்தில் இருப்பது போலவே உணர்வு இருக்கும். நேசித்தவர்களை நாம் மிஸ் செய்தாலும் அவர்கள் நம்மவர்கள்” என்று திடீரென லவ் குறித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஓவியா ரசிகர்கள் அவர் காதலில் விழுந்துள்ளாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் சிங்கிள் தான் என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவையும் பிறகு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.