“சூர்யா 40 எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு”… இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன சூப்பரான தகவல்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். தற்போது, இந்த படத்தின் அப்டேட் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டரில் “டியர் அன்பான ஃபேன்ஸ். 35% படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த ஷெடியூல் லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். எங்க டீம் ரெடியா இருக்கு. டைட்டில் மாஸ்-ஆ Pre Announcement-ஓட வரும். ஜூலை மாதம் வரை டைம் கொடுங்க ப்ளீஸ்” என்று கூறியுள்ளார்.

Share.