ஆதி – நிக்கி கல்ராணியின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பெற்றோர்கள்… திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, கீ, ராஜவம்சம்’ என படங்கள் குவிந்தது.

நிக்கி கல்ராணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, நிக்கி கல்ராணி நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நடிகை நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை காதலித்து வருவதாக கோலிவிட்டில் தண்டோரா போடப்பட்டது. ஆதி – நிக்கி கல்ராணி ஜோடியாக ‘மரகத நாணயம், யாகாவாராயினும் நா காக்க’ என இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், மிக விரைவில் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.