‘இரவின் நிழல்’ டீசர் வெளியீட்டு விழா… கோபத்தில் மைக்கை தூக்கி வீசிய பார்த்திபனை பார்த்து ஷாக்கான ஏ.ஆர்.ரஹ்மான்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படம் ‘இரவின் நிழல்’. ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரகிதா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேற்று (மே 1-ஆம் தேதி) இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேசிக் கொண்டிருக்கையில் பார்த்திபனின் மைக் வேலை செய்யாமல் போனது. அந்த டென்ஷனில் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாக எழுந்து கீழே இருந்த அவரது டீமின் மீது வீசி விட்டார் பார்த்திபன். இதை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ஷாக்காகி விட்டார். பின், சில நிமிடங்களுக்கு பிறகு கோபமாக நடந்து கொண்டதற்கு மேடையில் மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்.

Share.