‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் புகழ் சுதாகரின் திருமண புகைப்படங்கள்!

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் ஃபேமஸானவர்கள் தான் கோபி – சுதாகர். இவர்கள் டிரெண்டுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து காமெடி வீடியோக்களை செய்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறார்கள். நமது வாழ்க்கையிலும் கோபி – சுதாகர் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கோபி – சுதாகர் இருவரும் இணைந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘பிக் பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்தின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் காமெடியில் கலக்கியிருக்கும் புதிய படமான ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

சமீபத்தில் ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மார்ச் 13-ஆம் தேதி) இவரின் திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. சுதாகரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.