உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படம் ‘இரவின் நிழல்’. ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன். இந்த படம் இன்று (ஜூலை 15-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரகிதா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.