‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பட்டாஸ்’ ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மெஹ்ரீன் பிர்சடா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக நானி நடித்திருந்தார்.

‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’ படத்துக்கு பிறகு நடிகை மெஹ்ரீனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகானுபவுடு, ராஜா தி கிரேட், ஜவான், பந்தம், கவச்சம், F2 : Fun and Frustration, சாணக்யா, என்த மஞ்சிவாடவுரா, அஷ்வதாமா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்’ போன்ற படங்களில் மெஹ்ரீனை நடிக்க வைத்து தமிழ் சினிமாவும் அழகு பார்த்தது.

Pattas Actress Mehreen Takes First Dose Of Covid 19 Vaccine1

மெஹ்ரீன் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது ‘F3’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் மெஹ்ரீன். இந்நிலையில், இன்று நடிகை மெஹ்ரீன் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Share.