பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் மாஸான டீசர்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான க்ரிஷ் இயக்கி வருகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் நிதி அகர்வால், அர்ஜுன் ராம்பால், நர்கீஸ் ஃபக்ரி, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார், ஞானசேகர்.VS ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதனை ‘மெகா சூர்யா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) நடிகர் பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் புதிய டீசரை வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசர் படத்தின் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.