இளம் இயக்குனர் திடீர் மரணம் ! சோகத்தில் கோலிவுட் !

பென்சில் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான மர்மத் திரில்லர் திரைப்படமாகும், இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணி நாகராஜ் எழுதி இயக்கி இருந்தார் மற்றும் எஸ்.பி. ராகவேஷ் தயாரித்து இருந்தார் . இப்படம் தென் கொரிய திரைப்படமான 4வது பீரியட் மிஸ்டரியை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

இந்த படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கி உள்ள படம் வாசுவின் கர்ப்பிணிகள் . இந்த படத்தில் நீயா நானா கோபிநாத் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்து உள்ளனர் . இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .
இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றிவர் . இவரின் மரண செய்தி தமிழ் திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது .

இவர் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது . பொது மக்கள் மத்தியிலும் இவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Share.