துப்பாக்கியுடன் இயக்குனர் அட்லீ !

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் மசாலா படங்களை இயக்குவதில் வல்லவர் . ராஜா ராணி என்கிற காதல் படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இருக்குனராய் அறிமுகமாகி இருந்தார். இதன் பிறகு தெறி, மெர்சல் , என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர்.

இதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார்.அந்தப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு அட்லீ தமிழில் படம் எடுக்கவில்லை . தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜாவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனது சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .அதில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அமர்ந்து உள்ளார் .இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

Share.