வைரலாகும் கமல் ,கார்த்தி மற்றும் சூர்யா

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்‌.மேலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருந்தார் . சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து உள்ளது . திரையரங்கில் சூர்யா வரும் காட்சி அரங்கமே அதிரும்படியாக உள்ளது .

மேலும் நடிகர் சூர்யா விக்ரம் படத்தின் மூன்றாவது பாகத்தில் முழுவதுமாக வருவார் என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் பலர் இந்த படத்தை புகழ்ந்து வருகின்றனர் .
விக்ரம் மூன்றாவது பாகத்தில் நடிகர் கமல் , நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா மூவரும் இணைந்து நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷிற்கு நன்றி தெரிவித்து இருந்தார் மேலும் நடிகர் கார்த்தி விக்ரம் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார் . இந்நிலையில் நடிகர் கார்த்தி , சூர்யா இருவரும் நடிகர் கமலுடன் இருக்கும் பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது .

Share.