தமிழக சட்டமன்ற தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த ரஜினி – கமல்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 6-ஆம் தேதி) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது.

1

2

Share.