கார்த்தியுடன் மோதும் விஜய் சேதுபதி !

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் பிசாசு . இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் மிஷ்கின் . இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ராதா ரவி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக அறிவித்தார் .நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள் . மேலும் நடிகை பூர்ணா , நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளார் .கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . தற்பொழுது பிசாசு 2 படத்தின் டப்பிங்கை முழுவதுமாக விஜய் சேதுபதி முடித்து உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது .

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Share.