குட்டையான டவுசர் அணிந்து செம்ம செக்ஸி போஸ் கொடுத்த சஞ்சிதா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரையுலகில் சில படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி, தமிழில் அறிமுகமான முதல் படமே ‘ஜெயம்’ ரவியுடையது தான். அது தான் ‘தில்லாலங்கடி’
இதில் ஹீரோயின் தமன்னாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி.

அதன் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பீட்சா 2 : வில்லா, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வெக்கல, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சஞ்சிதா ஷெட்டி கன்னடம், தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் ‘ஆரஞ்சு’ என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் ‘பல்லு படமா பாத்துக்க, பார்ட்டி, பஹீரா, , அழகிய கண்ணே’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

 

Share.