விக்ரம் ரசிகர்களை காலால் எட்டி உதைக்கும் காவலர்கள் ! வைரலாகும் வீடியோ

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து இருக்கிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும், சமீபத்தில் வெளியான உயிர் உருகுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர் ,

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில்
நடைபெற்றது .தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டபடி பணிகள் முடியாமல்
இருந்தது அதனால் கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது .

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தை விளம்பரப்படுத்த நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படத்தின் படக்குழு திருச்சி சென்று உள்ளனர் . அங்கு நடிகர் விக்ரமை காண ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தார்கள். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது பிறகு இந்த காரணத்தினால் காவலர்கள் ரசிகர்களை காலால் எட்டி உதைத்து உள்ளனர் .தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

மேலும் காவலர்களின் இந்த செயல் பொதுமக்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது தொடர்பாக நடிகர் விக்ரம் தனது வருத்தத்தை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் .

Share.