தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு நகர்த்த போவது யார் ?

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் .த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
பாகுபலி , கே.ஜி.எஃப், போன்ற மற்ற மொழி படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் தமிழில் முன்னணி நடிகர்கள் எல்லோரும் படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் தங்களது சம்பளமாக பெறுகிறார்கள் . இதனால் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை , முன்னணி நடிகர்கள் அனைவரும் தங்களது நட்சத்திர அந்தஸ்தை வளர்க்கவும் , அரசியில் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்து தரும் படங்களில் நடிக்க தான் விரும்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் தான் தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு நகர்த்தும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் நம்புகிறார்கள் . இந்த எதிர்பார்ப்பை மணிரத்னம் பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வருகின்ற ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share.