பூஜாவுக்கு நடந்த மோசமான சம்பவம்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டெ. சம்பித்தில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் . இவர் நடமாடிய அரபிக் குத்து பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . பீஸ்ட் படத்திற்கு பிறகு இன்னும் எந்த ஒரு தமிழ் படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள பாவாடியுடே பகத்சிங் என்கிற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் பூஜா சமீபத்தில் விமானத்தில் மும்பை சென்று உள்ளார் அப்போது அவர் சந்தித்த மோசமான சம்பவத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, மும்பையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானத்தில் நான் பயணித்தேன். அப்போது அதன் ஊழியர் விபுல் நக்ஷே எங்களிடம் நடந்து கொண்ட முறை எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது . பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து நான் எப்போதும் சோஷியல் மீடியாவில் கூறுவது கிடையாது. ஆனால் அந்த பயணத்தின் போது எங்களுக்கு நடந்த சம்பவம் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share.