வில்லனாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்ட டாப் ஹீரோ… ஷாக் மோடில் படக்குழு!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த நடிகர். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான இந்த நடிகருக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோவாக அசத்தி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில், டாப் ஹீரோவின் தமிழ் படம் மற்றும் புதுமுகங்கள் நடித்த தெலுங்கு படத்திலும் இந்த ஹீரோ வில்லனாக மிரட்டியிருந்தார். இதனால் பல தெலுங்கு படத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆசைப் படுகிறார்கள்.

அதுவும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோ ஒருவர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஜெட் ஸ்பீடில் உருவாகி வரும் படத்திலும் இந்த நடிகரை வில்லனாக நடிக்க அணுகியிருக்கிறார்கள். ஆனால், இந்த நடிகரோ வில்லனாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ரூ.20 கோடியா? என ஷாக்கான படக்குழுவினர், மலையாளத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ஒருவரை ரூ.2.5 கோடிக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள்.

Share.