‘இரும்புக்கை மாயாவி’ படத்திலிருந்து விலகிய சூர்யா… அவருக்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் தெரியுமா?

சினிமாவில் 12 டாப் இயக்குநர்கள் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளனர். இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், சசி, வசந்த பாலன், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Rain on films).

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதில் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம், கைதி, மாஸ்டர்’ ஆகிய மூன்று படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இந்த படத்துக்கு ‘இரும்புக்கை மாயாவி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும், இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யா விலகி விட்டார் என்றும், அவருக்கு பதிலாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Share.