சர்ச்சைகளில் சிக்க இது தான் காரணமா?… ஷாக்கான ஹீரோவின் நண்பர்கள்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த நடிகர். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான இந்த நடிகருக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோவாக அசத்தி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில், டாப் ஹீரோவின் தமிழ் படம் மற்றும் புதுமுகங்கள் நடித்த தெலுங்கு படத்திலும் இந்த ஹீரோ வில்லனாக மிரட்டியிருந்தார். இதனால் பல தெலுங்கு படத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆசைப் படுகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே இவரை பற்றி பல சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கே ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறார் என்றும், பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பு என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரது நண்பர்கள் அவரிடமே பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர் “சர்ச்சைகள் ஜாஸ்தியாக வந்து கொண்டே இருந்தால் தான், நான் நினைத்தபடி எனது சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கும்” என்று கூறி நண்பர்களை ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் செய்து விட்டார்.

Share.