செல்வராகவன் இயக்கும் ‘ராயன்’… தனுஷின் தம்பியாக நடிக்கும் பிரபல ஹீரோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் இந்த ஆண்டு (2021) ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் ‘ராயன்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் தனுஷுக்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.