2 மொழிகளில் லிங்குசாமி இயக்கும் புதிய படம்… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோ!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். சமீபத்தில், இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்கிறார். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க கோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.