ஆல்ரெடி நடித்த ஹீரோயின்ஸுடன் மீண்டும் நடிக்க மாட்டேன்… ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிரபல ஹீரோ!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாரின் மருமகன் தான் அந்த ஹீரோ. இவரது அப்பா, அண்ணன், மனைவி ஆகியோர் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஹீரோ நடிப்பில் பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்டில் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கில படமும் உள்ளது.

அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க பல பாப்புலர் ஹீரோயின்ஸ் ஆசைப்படுகிறார்கள். அதுவும் ஒரு படத்தில் டூயட் பாடி ஆடினாலும், இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் ஹீரோயின்ஸ். ஆனால், ஹீரோவோ அந்த விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.

இனிமேல் ஒரு ஹீரோயினுடன் ஒரு படத்தில் நடித்து விட்டால், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம். மேலும், பாப்புலர் தமிழ் ஹீரோயின்களே வேண்டாம், புதுமுக நடிகைகள் அல்லது பாலிவுட் ஹீரோயின்ஸுடன் டூயட் பாடி ஆட வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம். ஏற்கனவே, அவருடன் நடித்த ஹீரோயின்ஸ் இது தொடர்பாக அந்த ஹீரோவிடம் கேட்டால், படக்குழுவினர் தான் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறாராம்.

Share.