இயக்குநரே சைலன்ட்டாக இருக்கிறார்.. ஆனா, அந்த விஷயத்தால் டென்ஷனான நம்பர் நடிகை!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக அந்த இயக்குநர் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம். எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம்.

அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இப்போது அந்த நம்பர் நடிகை – ரௌடி பட இயக்குநர் காம்போவில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இதில் மக்களுக்கு மிகவும் பிடித்த அந்த டாப் ஹீரோ நடிக்கிறார். இதில் இன்னொரு நடிகையும் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஒரு காட்சியை படமாக்கும்போது செகண்ட் ஹீரோயின் அசத்தலாக நடிக்க, ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரும் அவரின் நடிப்பை பார்த்து வியந்து கைத்தட்டியுள்ளனர்.

இதனை பார்த்த நம்பர் நடிகை டென்ஷனாகி “சைலன்ட்… ஏன் இவ்ளோ சத்தம் போடுறீங்க” என்று கோபப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ரௌடி இயக்குநரும், நம்பர் நடிகையும் காதலித்து வருவதால் இந்த மாதிரி சம்பவங்கள் கண்டிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் என்று முன்பே கணித்த அந்த செகண்ட் ஹீரோயின், ஆரம்பத்தில் பல காரணங்களை சொல்லி இப்படத்தில் நடிக்க மறுத்து வந்தார். இப்போது வேறு வழியின்றி ஒப்பந்தமானதால், இப்படியெல்லாம் நம்பர் நடிகை அவரை அசிங்கப்படுத்துகிறார்.

Share.