முன்னணி தயாரிப்பாளர் சொன்ன விஷயம்… டென்ஷனாகி அவரை திட்டிய பிரபல நடிகை!

தமிழ் திரையுலகில் ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கிய படத்தில் அறிமுகமானவர் இந்த பிரபல நடிகை. அதன் பிறகு ஜீனியஸ் இயக்குநரின் படத்தில் நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். நடிப்பு மட்டுமின்றி, இவர் பல படங்களில் சூப்பரான பாடல்களையும் பாடி அசத்தியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம் ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியதும் இந்த நடிகை தானாம்.

சமீபத்தில், டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் இந்த நடிகை நடித்தார். படத்தில் கமிட்டாவதற்கு முன்பு, இந்த நடிகைக்கு அதிக ஸ்கோப் இருப்பது போல் கதை சொல்லி அசத்தியிருக்கிறார் படத்தின் இயக்குநர். ஆனால், படத்தில் ஐந்து காட்சிகளில் மட்டுமே இவர் வலம் வந்திருந்தார். அதுவும் ‘வாம்மா மின்னல்’ வேகத்தில் வந்து சென்றார்.

இதனால் அந்த நடிகை செம அப்செட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில், முன்னணி தயாரிப்பாளர் இந்த நடிகையை சந்தித்து அவர் எடுக்கும் புதிய படத்தில் நடிக்க கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்டதும், இதிலும் தனக்கு டம்மி ரோல் தான் என்று தெரிந்து கொண்ட நடிகை அத்தயாரிப்பாளரை திட்டி அனுப்பி விட்டாராம்.

Share.