தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஆஷ்னா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆஷ்னா சவேரி. இவருக்கு தமிழ் திரையுலகில் அமைந்த முதல் படமே சந்தானத்துடன் தான். அது தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மரியாத ரமண்ணா’ படத்தின் ரீமேக்கான இதனை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோவாக சந்தானம் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஆஷ்னா ‘வானதி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ஆஷ்னா சவேரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’, காளிதாஸ் ஜெயராமின் ‘மீன் குழம்பும் மண் பானையும், நகுலின் ‘பிரம்மா.காம்’, ‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஆஷ்னா சவேரி நடிப்பில் ரெடியாகி உள்ள புதிய படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. ரொமான்டிக் காமெடி படமான இதனை ஜானகிராமன் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் ஃபேமஸான கலையரசன் ஹீரோவாக நடிக்க, இன்னொரு ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஷ்னா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.