சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகை… ஷாக் மோடில் ரசிகர்கள்!

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. தமிழில் இவர் அறிமுகமானதே நம்பர் படத்தில் தான். அதன் பிறகு பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதுவும் அந்த தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் இயக்கிய மெகா பட்ஜெட் படம், அந்த நடிகையின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

கடைசியாக அந்த நடிகை நடித்த ஒரு த்ரில்லர் படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் தட்டினார்கள். அதன் பிறகு தமிழில் நடிக்க எந்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் அணுகினாலும் ரெட் சிக்னல் மட்டுமே காட்டி வந்தார் அந்த நடிகை. தற்போது, அந்த நடிகை அவரது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தெலுங்கு படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

இக்கதைப்படி ஹீரோயின் கேரக்டருக்கு 40 வயதாம், ஹீரோ கேரக்டருக்கு 25 வயதாம். இவர்கள் இருவரும் காதலிப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான துப்பறியும் படத்தில் நடித்தவர் தான் இதில் ஹீரோவாம். ஆனால் விஷயம் அதுவல்ல, இப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக நடிக்கப்போகிறாராம் அந்த நடிகை. இதனை கேள்விப்பட்ட அந்த நடிகையின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.