2-வது படத்திலேயே இளம் ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்… ஷாக் மோடில் சக நடிகைகள்!

கன்னட திரையுலகில் வெளியான பார்ட்டி படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. அந்த படம் ஹிட்டானதும் கன்னடத்தில் சில படங்கள் நடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். அங்கு ரெட்டி பட நடிகருடன் டூயட் பாடிய படத்தில் இடம்பெற்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.

அதன் மூலம் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் அந்த நடிகை. தெலுங்கிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கடைசியாக அந்த நடிகை நடித்த ஒரு தெலுங்கு படமும் வெற்றி பெற்றதும் அவரது சம்பளம் ரூ.1 கோடியே 20 லட்சமாக மாறியது என்று சொல்லப்பட்டது. இப்போது, அந்த நடிகை தமிழில் பருத்திவீரனுக்கு ஜோடியாக நடித்துள்ள படம் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில், இந்த நடிகை ஹிந்தி திரையுலகிலும் என்ட்ரியாக உள்ளார் என்ற செய்தி வந்தது. கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் தான் முதல் ஹிந்தி படத்துக்கான அறிவிப்பு வந்தது, அதற்குள் கடந்த ஜனவரி மாதம் இன்னொரு ஹிந்தி படத்திலும் ஒப்பந்தமானார் அந்த நடிகை. இந்த படத்தில் பிக் பி நடிகர் தான் ஹீரோவாம். இதெல்லாம் விட ஹைலைட் என்னவென்றால், அந்த நடிகைக்கு இப்படத்தில் நடிப்பதற்காக ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதை கேட்ட சக இளம் நடிகைகள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.