காதலில் விழுந்த இளம் நடிகை… ஆனா, அந்த இயக்குநருக்கு 40 வயதாமே!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த இளம் நடிகை. அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், தமிழ் திரையுலகிலும் என்ட்ரியாக ஆசைப்பட்டார். தமிழில் அறிமுகமான முதல் படமே துப்பறியும் படம் தான்.

இந்த படம் ஹிட்டாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு தமிழ் படத்தில் நடித்தார். டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டி வரும் நடிகர் தான் இதில் ஹீரோவாக நடித்தார். தற்போது, 23 வயதான இந்த இளம் நடிகை காதலில் விழுந்து விட்டதாகவும், அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர் காதலிக்கும் பிரபல இயக்குநருக்கு 40 வயதாம்.

தமிழில் வயது வித்தியாசத்தை குறிப்பிட்டு டைட்டில் வைக்கப்பட்ட படத்தை இயக்கியது இந்த இயக்குநர் தானாம். இந்த இயக்குநர் கடைசியாக இயக்கிய படத்தில் நம்ம இளம் நடிகையும் நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மாறியிருக்கிறது. இந்த இயக்குநரின் அப்பா டாப் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.