பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று சொன்னாலே இவரின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வந்தவர் தான் அந்த ‘ந’ நடிகை. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்தின் ஹீரோ நம்ம கேப்டன் தான். முதல் படம் சூப்பர் ஹிட்டானதும் அந்த நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. நடித்த எல்லா படங்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்து வந்த அந்த நடிகைக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் போனதும், டக்கென முன்னணி ஹீரோ தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

அதன் பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த நடிகையோ திருமணம் செய்து கொண்டார். ஆகையால், பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. தற்போது, அந்த ‘ந’ நடிகை பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

Share.