முன்னணி ஹீரோக்களுடன் டூயட்… பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தை செய்யும் நடிகை!

பிரபல நடிகையின் மகள் தான் இந்த நடிகை. ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இந்த நடிகை ஒரு கட்டத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டி வரும் நடிகருக்கு ஜோடியாக இந்த நடிகை நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.

இவ்விரண்டு படங்களும் அந்த நடிகையின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. அதன் பிறகு டாப் ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின், ஒரு நடிகையின் பயோ பிக்கில் நடித்து அந்த தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார் இந்த நடிகை.

சமீபத்தில் இந்த நடிகை தனது உடல் எடையை குறைத்து விட்டதால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், தற்போது மீண்டும் உடல் எடையை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் நடிகை. அதுமட்டுமின்றி, தன்னுடன் ஏற்கனவே டூயட் பாடிய ஹீரோக்களுக்கு போன் செய்து அந்த நடிகை வாய்ப்பு கேட்டு வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.