விளம்பர படத்தில் நடிக்க இவ்ளோ சம்பளமா?… கறாராக இருக்கும் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த புன்னகை நடிகை. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இந்த புன்னகை நடிகை, ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகும் புன்னகை நடிகை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதுவும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது, புன்னகை நடிகையின் நடிப்பில் தமிழில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், நிறைய விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒரு நாளைக்கே ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம். இது அதிகம் என்று சிலர் கூறினாலும், புன்னகை நடிகை சம்பளத்தை குறைத்து கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.

Share.