வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் அறிமுகான முதல் படத்தில் சின்ன ரோல் தான் கிடைத்தது. அது தான் ‘காதலில் சொதப்புவது எப்படி’. அதன் பிறகு ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோயின் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா மேனன்.

‘ஆப்பிள் பெண்ணே’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால்’ என படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா மேனன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

தற்போது, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் தமிழில் அசோக் செல்வனின் ‘வேழம்’, தெலுங்கில் ரவி தேஜா படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.