முன்னணி ஹீரோக்களுடன் டூயட்… பட வாய்ப்புக்காக இளம் ஹீரோயின் எடுத்த புது ரூட்!

பிரபல ஒளிப்பதிவாளரின் மகள் தான் அந்த இளம் நடிகை. இதுவரை இவர் நடித்து தமிழில் இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். இதில் ஒரு படம் இந்த ஆண்டு தான் வெளியானது.

ஏற்கனவே, இந்த நடிகை மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் தமிழில் நடிக்கும் படத்தை துருவ இயக்குநர் இயக்க, டாப் ஸ்டாரின் மருமகன் தான் ஹீரோவாக நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்க, சில முன்னணி ஹீரோக்களிடம் பேசி வருகிறாராம் அந்த நடிகை. அதுவும் படத்தின் கதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு உங்களுடன் சேர்ந்து ஜோடியாக டூயட் பாடி ஆடினால் போதும் என்று ஐஸ் வைத்து வருகிறாராம். பட வாய்ப்புகளை பெற வேண்டும் என நடிகை இந்த மாதிரிலாம் ஐஸ் வைக்கிறாரே என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.