பொன்ராம் படத்தில் போலீஸாக நடிக்கும் விஜய் சேதுபதி… ஹீரோயின் யார் தெரியுமா?

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் பொன்ராம் இயக்கும் படம் விஜய் சேதுபதியின் கேரியரில் 46-வது படம். இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான புகழ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு க்ரீத்தி நடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அறிவித்துள்ளது.

Share.