விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 66’… ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘சர்கார், பைரவா’ என இரண்டு படங்களில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.