பிகினியில் கில்மா போஸ் கொடுத்த பூனம்… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ‘மொததி சினிமா’ என்ற தெலுங்கு படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நவ்தீப் நடித்திருந்தார். நவ்தீப்பிற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருந்தார். இது தான் பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்த பூனம் பாஜ்வா, அடுத்ததாக கன்னட திரையுலகில் என்ட்ரியானார்.

அங்கு தர்ஷனின் ‘தங்கிகாகி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று பூனம் பாஜ்வாவிற்கு ஆசை வந்து விட்டது. பரத்தின் ‘சேவல்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியது. ‘சேவல்’ படத்துக்கு பிறகு நடிகை பூனம் பாஜ்வாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை’ என படங்கள் குவிந்தது.

பின், ‘சைனா டவுன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி அங்கையும் சில படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா. கடைசியாக பூனம் பாஜ்வா நடித்த தமிழ் படம் ‘குப்பத்து ராஜா’. இப்போது பூனம் பாஜ்வா ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து பூனம் பாஜ்வா நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.