தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என படங்கள் குவிந்தது. ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா சரண். இப்போது, ஸ்ரேயா சரண் நடிப்பில் ‘கமனம்’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), ‘RRR’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’, ஹிந்தியில் ‘தட்கா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.