கதையில் அப்படியொரு மாற்றத்தை செய்ய சொன்ன லவ் பட நடிகை… டென்ஷனான பிரபல இயக்குநர்!

மலையாள திரையுலகில் லவ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அந்த நடிகை. அதன் பிறகு மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து அந்த நடிகையின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது தெலுங்கில் மட்டுமே நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவர் தமிழில் குழந்தை சென்டிமென்ட்டை வைத்து வெளியான ஹாரர் படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு டாப் ஸ்டாரின் மருமகன் ஹீரோவாக நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக டூயட் பாடி ஆடினார். அவர் டூயட் பாடி ஆடிய அந்த ரௌடி பாடல் உலக அளவில் ஃபேமஸ் ஆனது. அதன் பிறகு ஜீனியஸ் இயக்குநரின் படத்தில் நடித்தார். சமீபத்தில், இந்த நடிகையை நேரில் சந்தித்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குநர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த படத்தில் ஹீரோ பருத்திவீரனுக்கு டபுள் ரோல்களாம்.

அதில் ஒரு ரோலுக்கு கதையில் அதிக ஸ்கோப் இருக்கிறதாம். இதில் ஹீரோயினாக நடிக்க கதை சொன்ன இயக்குநரிடம், அந்த டபுள் ரோலில் அதிக ஸ்கோப் உள்ள ரோலை ஹீரோயினுக்கு தகுந்தாற்போல் மாற்றினால் நான் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்கிறேன் என்று சொன்னாராம் அந்த நடிகை. இதை கேட்ட அந்த இயக்குநர் டென்ஷனாகி விட்டாராம்.

Share.