புடவையில் பேரழகாய் மின்னும் வாணி போஜனுக்கு முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே, லாக்கப்’, இந்த ஆண்டு (2021) ரிலீஸான ‘மலேஷியா டு அம்னீஷியா, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய நான்கு தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், மகான்’ என ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை வாணி போஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.