சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

தமிழ் திரையுலகில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அந்த சர்ச்சை நடிகை. இவர் அறிமுகமான முதல் படத்தில் நம்ம வாத்தி தான் ஹீரோ. அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அதுவும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

பின், டாப் ஹீரோ தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அங்கையும் அந்த நடிகையால் பல சர்ச்சைகள் வெடித்தது. அதன் பிறகு அந்த நடிகை கடந்த ஆண்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அதுவும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் முடிவுக்கு வந்தது தனிக் கதை. தற்போது, விஷயம் அதை பற்றி அல்ல, இந்த சர்ச்சை நடிகை சமீபத்தில் நடிக்க ஒப்பந்தமான படத்தை பற்றி.

லவ் படமான இதில் ஹீரோ யார்? என்று தெரிந்ததும் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமுமே ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆனது. ஏனெனில், அந்த நபர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுதானாம். மேலும், அவர் ஒரு நடமாடும் நகைக்கடையாம். சும்மாவே பிரச்சனையில் சிக்கும் இந்த நடிகை இப்போது இந்த நபருடன் வேறு ஜோடி சேர்ந்துள்ளாரே, ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸாவதற்குள் என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.