‘ந’ நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான டாப் ஹீரோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகர். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தான் இந்த நடிகர் பிரபல டிவி சேனலில் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவின் ஷூட்டிங் முற்றிலும் நிறைவு பெற்றது. இப்போது அந்த நடிகரின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநரின் பார்ட் 2 படமும், இளம் இயக்குநரின் படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் பிரம்மாண்ட இயக்குநரின் படம் பல சிக்கலில் சிக்கி அடுத்து எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் பாதியில் நிற்கிறது. இளம் இயக்குநரின் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அந்த நடிகர் தனது கால்ஷீட் டைரியில் இணைய இன்னொரு புதிய படத்துக்கும் ஓகே சொன்னார்.

Popular Actress's Strict Condition To Act In Top Hero's Film1

Popular Actress’s Strict Condition To Act In Top Hero’s Film1

இது ஏற்கனவே ஊர் பெயரை டைட்டிலாக வைத்து, பிரபல மலையாள இயக்குநர் இயக்கிய த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகமாம். இதில் அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத ‘ந’ நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்த ‘ந’ நடிகையோ பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார். இதனால் கடுப்பான அந்த நடிகர், இப்படத்தில் ‘ந’ நடிகையை நடிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும், ஏற்கனவே தன்னுடன் சில படங்களில் நடித்த ‘பூ’ நடிகையை கமிட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Share.