முன்னணி ஹீரோக்களுடன் தான் டூயட்… அடம்பிடித்த இளம் நடிகையின் தற்போதைய நிலை!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் அந்த நடிகை. கண்ணை கட்டும் லவ் படம் தான் அந்த நடிகைக்கு முதல் படம். முதல் படமே அந்த நடிகைக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சில படங்கள் குவிந்தது. அதில் இரண்டு படங்களில் பிரபல இயக்குநர்கள் தான் ஹீரோவாக நடித்திருந்தார்கள். அதனால், தனது கேரியர் கிராப் அடுத்த லெவலுக்கு சென்று விட்டது என்று நினைத்த அந்த நடிகை, சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுக்க துவங்கியிருக்கிறார்.

இனிமே நடித்தால் முன்னணி ஹீரோக்கள் – இயக்குநர்களின் படங்கள் தான் என்று அடம் பிடித்து நடிகை வெயிட் பண்ணியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த ஒரு பெரிய பட வாய்ப்பும் அவர் வீட்டு காலிங் பெல்லை அடிக்க வில்லை. அதன் பிறகு கவர்ச்சி ரூட்டில் சென்று, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டு வந்தார். சில பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு தூதும் அனுப்பி டயர்டாகி விட்டார். இப்போது எதுவும் ஒர்க்கவுட் ஆகாததால் நடிகை செம அப்செட்டில் இருக்கிறாராம்.

Share.