‘ஆதிபுருஷ்’-யில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லையாம்… பிரபாஸுக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையாமே!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இப்போது நடித்து வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளார். சமீபத்தில், பிரபாஸின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்தது.

‘ஆதிபுருஷ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கவுள்ளாராம். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாக தண்டோரா போடப்பட்டது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்த போது “இந்த செய்தி உண்மையல்ல. வதந்தியே” என்று கூயியுள்ளனர்.

தற்போது, இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) துவங்கவுள்ளனர். படத்தை 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.

Share.